நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பாகலஅள்ளி ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, கழிவுநீர் கால்வாய் பணிகள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சி, அருந்ததியர் காலனியில் ரூபாய் 5.55 இலட்சம் மதிப்பீட்டில் 10,000லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் மற்றும் பாகலஅள்ளி ஆதிதிராவிடர் காலனியில் ரூபாய் 6.65 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் ஆகிய இரண்டு பணிகளுக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார்.
உடன், பாகலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி துணை தலைவர் ரம்யாகுமார், நல்லம்பள்ளி கூட்டுறவு சங்க தலைவர் என்.ஜி.எஸ்.சிவபிரகாசம், மாவட்ட கவுன்சிலர் குமார், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
