தர்மபுரி மாவட்டம், பொம்மிடி. பொ,மல்லாபுரம் பேரூராட்சி, விஜய நகரம் பகுதியில் சேர்வராயன் மலையில் உற்பத்தியாகி ஓடும் வேட்பாடி ஆறு இப்பகுதி வழியாக செல்கிறது, இப்பகுதியில் ஆற்றின் மறுபுறம் பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்

இவர்கள் தங்கள் அன்றாட தேவைக்கான விவசாய காய்கறி பொருட்கள் விற்பனை, மளிகை சாமானம் வாங்குவது, மருத்துவ வசதி, போன்ற தேவைக்கு ஆற்றில் இறங்கி வரும் நிலை நீடிக்கின்றது.
இவர்கள் பொம்மிடிக்கு தங்கள் அன்றாட தேவை, அரசு அலுவலகம்.வெளியூர் பயணத்திற்கு பேருந்துக்கு செல்வது போன்ற தேவைக்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்றியே பொம்மிடி வந்து சேரும் நிலை உள்ளது இது பெரும் சிரமாக உள்ளதால் பெரும்பான்மையானவர்கள் இந்த ஆற்று பாதையில் இறங்கி கடந்து செல்கின்றனர், இப்பகுதியில் மழை வெள்ள காலங்களில் இப்பகுதி மக்கள் ஆற்றைக் கடந்து மறுபுறம் வருவதற்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் சில நேரங்களில் காட்டாற்று திடீர் வெள்ளம் செல்கின்றது.
இந்த ஆற்று பாதை வழியாக பள்ளி மாணவ மாணவியர்கள் பள்ளிக்குச் சென்று வருவது இந்த ஆற்றுப் பாதை வழியாகத்தான், எனவே மாவட்ட நிர்வாகம் ஆபத்தான நிலையில் ஆற்றைக் கடந்து செல்லும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு .இப்பகுதி மக்களின் சிரமம் கருதி உடனடியாக இந்தப் பகுதியில் ஆற்று பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.