தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒடசல்பட்டியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் திட்டத்தின் உள் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கு லாபகரமான முறையில் கறவை மாடுகள் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மொரப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்பழனிவேல் தலைமை வகித்தார்.

தர்மபுரி மாவட்ட கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உதவி பேராசிரியர் விஜயகுமார் அவர்கள் கறவை மாடுகள் வளர்ப்பு, இன்றைய நிலையில் தரமான கறவை மாடுகள் தேர்வு செய்தல், கொட்டகை அமைப்பு முறை, கறவை மாடு வளர்ப்புக்கான சமசீர் தீவனம், தீவன மேலாண்மை, கறவை மாடுகளில் கன்று கிடாரி பராமரிப்பு, கறவை மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள் அவற்றை தடுக்கும் வழிமுறைகள், கண்று வளர்ப்பு பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்ப தங்கள் குறித்து எடுத்துரைத்தார், கால்நடை உதவி மருத்துவர் யுவராஜ் அவர்கள், கால்நடைகளில் குடற்புழு நீக்கல், நோய்களுக்கு தொழில்நுட்பத்தை எடுத்துக் கூறினார், மேலும் உதவி வேளாண் அலுவலர் இளையராஜா வேளாண்மை துறை சார்ந்த மானிய திட்டங்கள் எடுத்து விளக்கி கூறினார்.
தோட்டக்கலை உதவி அலுவலர் கணேசன் தோட்டக்கலையில் மானிய திட்டங்கள் எடுத்து கூறினார், மொரப்பூர் தொழில்நுட்ப மேலாளர் திருமால் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் பற்றியும், உதவி தொழில்நுட்ப மேலாளர் வீரதளபதி விழாவில் நன்றியுரை கூறினார்.
இதில் 50-க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயிற்சி முகாமில் பங்கேற்றினர்.