இவர் சமீப காலமாக கடன் தொல்லையால் இருந்ததாக கூறப்படுகிறது, இதனால் மன உளைச்சலில் இருந்த இவர் நேற்று மதியம் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் யாரும் இல்லாத போது செடிகளுக்கு அடிக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்

இதை அறிந்து அவரது குடும்பத்தினர் இவரை மீட்டு பொம்மிடியில்உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இவர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஒடசல்பட்டி கூட்ரோடு என்ற இடத்தில் உயிரிழந்தார், இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது
இச்சம்பவம் குறித்து இறந்து போன செல்வராஜின் தந்தை தேவன் கொடுத்த புகாரின் பேரில் பொம்மிடி காவல் ஆய்வாளர் பொறுப்பு நாகலட்சுமி வழக்கு பதிவு செய்தார். சம்பவம் குறித்து காவல் உதவி ஆய்வாளர் முருகன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.