தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கனூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நாச்சகவுண்டனூரில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மணி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ரங்கநாதன் வரவு செலவு கணக்கு அறிக்கை வாசித்தார்,

இக்கூட்டத்தில் துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு சிறப்பு கௌரவம் செய்யபட்டது. இந்த கூட்டத்தில் அரசின் வேளாண்மை சார்ந்த திட்டங்கள் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் அரசு பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மா.பழனி ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர்