தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றிய மாங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவராக சேர்ந்துள்ளார் அவர்களை பாராட்டி மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களை பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆர் சம்பத்குமார் தலைவர் அவர்கள் பென்னாகர வட்ட நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சிக்கு மருத்துவர் முனிராசு அவர்கள் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியின் முன்னிலையில் மாரிமுத்து ஆறுமுகம் பிரபாகரன் இணைந்த கரகங்கள் உறுப்பினர்கள் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திரு பழனி தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சின்ன பள்ளத்தூர், ஜீவா நகர செயலாளர் பென்னாகரம் மற்றும் வெற்றி ஒன்றிய தலைவர் நஞ்சப்பன் கதிர் சரவணன் சசி ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள், நிகழ்ச்சி இறுதியில் வீரமணி அவர்கள் நன்றியுரை வழங்கினார்