பென்னாகரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெண்கள் மற்றும் சூத்திரர்களை பற்றி இழிவாக கூறும் மனுஸ்மிருதி நூலை இலவசமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் நவம்பர் 6ஆம் தேதி ஆர் எஸ் எஸ் பேரணி நடத்துவதற்காக நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தனர். ஆனால் மதம், இனம் என மக்களிடம் பிரிவினை ஏற்படுத்தும், ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதிக்க கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும் நீதிமன்றம் உத்தரவு கொடுத்ததால் நவம்பர் 6ஆம் தேதியான இன்று தமிழக முழுவதும் இந்து பெண்களையும், சூத்திரர்களையும் இழிவு படுத்துகின்ற, மனுஸ்மிருதி நூலை அச்சிட்டு, ஒரு லட்சம் நூல்கள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் தெரிவித்திருந்தார். ஆனால் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழினத் தலைவர் எழுச்சித்தமிழர் தொல் திருமா அவர்கள் இந்து பெண்களை இழிவுபடுத்தும் 32 பக்கம் கொண்ட மனஷ்மிருதி நூலை இன்று சென்னையில் மக்கள் மத்தியில் வெளியிட்டார் இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திட்டமிடப்பட்ட, பெண்கள் மற்றும் சூத்திரர்களை பற்றி கூறும் மனுஸ்மிருதி நூல் விநியோகம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட பென்னாகரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனுஸ்மிருதி நூல் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னதாக முழுக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள், வணிகர்கள், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்டோருக்கு இலவசமாக மனுத்மிருதி நூலினை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாகமா குண்டு சரவணன் ஒன்றிய செயலாளர் பெண்ணகரம் சிறப்பு அழைப்பாளர் மன்னன் என்கின்ற ராஜா தர்மபுரி மேற்கு மாவட்ட பொருளாளர் பிரகாஷ் ஒன்றிய துணை செயலாளர் ஆட்டோ நாகராஜ் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை தொகுதி துணை அமைப்பாளர் ஹரி ஒன்றிய பொறுப்பாளர் மோகன் முத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.