தமிழ்நாடு மாவட்ட அளவிலான ஏரோஸ்கேட்டோபால் விளையாட்டுப் போட்டி கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடந்தது. தமிழ்நாடு திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி என பத்துக்கும் அதிகமான மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடினர். இதில் நமது தர்மபுரி மாவட்ட மாணவர்கள் 14-வயதுக்கு உட்பட்ட பிரிவிலும் 17-வயதுக்கு உட்பட்ட பிரிவிலும் மூன்றாவது இடம் பிடித்து பதங்கங்களை வென்றார்கள், அதிவேக உருளை சறுக்கு போட்டியில் 14-வயது பிரிவில் செல்வன் நேஷந்த் சந்திர சேகர் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டியில் இறுதி நாளான இன்று சிறப்பு விருந்தினராக முசிறி சட்டமன்ற உறுப்பினர் திரு.தியாகராஜன் மற்றும் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திரு.ரெக்ஸ் போட்டியில் சிறப்பு விருந்தினரா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். இப்போட்டியில் கலந்து கொள்ள மிக உற்சாகப்படுத்திய பெற்றோர்கள் மற்றும் செயலாளர் மாஸ்டர் திரு.V. சீனிவாசன், இணை செயலாளர் , திரு.சீனிவாஸ் , மாஸ்டர் திரு.சந்திர மோகன் மற்றும் குழு மேலாளர் திரு.வெங்கடேசன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினார்கள்.
