தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு, நெல்லிக்கனி நண்பர்கள் அறக்கட்டளை, சிதம்பரம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியோர் இணைந்து பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கான குறும்படம் மூலம் பன்நோக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

இதில் பொது தேர்வை எதிர்கொள்வது குறித்தும் மாணவிகள் குழுவாக சேர்ந்து படிப்பது, தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது, தேர்வு பயத்தை கலைவது, தேர்வு நாட்களுக்கு முன் தன்னை எப்படி தயாரித்துக் கொள்வது, சுத்தம், பராமரிப்பு எப்படி நம் நலனை பேணி காப்பது போன்றவை மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, பாலசுப்பிரமணியம், உத்திராதேவி, விஜயராஜேந்திரன் மற்றும் மலைமுருகன், தலைமை ஆசிரியர் கலைச்செல்வி நன்றி தெரிவித்தார்.
