தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக நகர செயலாளர் வெங்கடேஷன் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கும் நோட்டு புத்தகம், பேனா, பென்சில் மற்றும் பொதுமக்களுக்கு தென்னங்கன்று, சாப்பாடு, இனிப்பு வகைகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், யதிந்தர் ஜோதிவேல், ஆறுமுகம் உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
