பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பாலக்கோடு மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் அவர்கள் தலைமையில் கரகத அள்ளி காந்தி ஆசிரமத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தர்மபுரி மேற்கு மாவட்ட பாலக்கோடு மத்திய ஒன்றியம் கரகதள்ளியில் உள்ள காந்தி ஆதரவற்றோர் ஆசிரம மாணவர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு சீருடை நோட்டு புத்தகங்கள் மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை பாலக்கோடு மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமையில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ஆ.மணி,பொருளாளர் முருகன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடாஜலம்,பொது குழு உறுப்பினர் முத்துஜா, மூத்த வழக்கறிஞர் சந்திர சேகர், விவசாயி அணி குமார், ஒன்றிய அவைத்தலைவர் ராஜா மணி, கவுன்சிலர்கள் அழகு சிங்கம், முத்து சாமி,மாவட்ட பிரதிநிதி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன்,பட்டு அஜிஸ்யுல்லா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
