தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கொடியேற்றி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தர்மபுரி கிழக்கு ஒன்றியம் சார்பில் நூலஅள்ளி ஊராட்சி, திருமலை கவுண்டன் கொட்டாய் பகுதியில் நடந்தது.

தர்மபுரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் நடந்த இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கலந்துகொண்டு ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியதோடு, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம் முன்னிலையில் நடந்த இவ்விழாவில் சீரங்கமுத்து, முருகன், சேகர், மல்லன், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் சின்னசாமி, மிலிட்டரி நரசிம்மன் மற்றும் கழக தொண்டர்களும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
