தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் தேசிய அரசியலமைப்பு தினத்தினை முன்னிட்டு அரசியலமைப்பு முகப்புரை வாசிக்கும் நிகழ்ச்சி, அரசியலமைப்பு முகப்புரை வாசித்து கொண்டதற்கான பதாகை யில் கையொயப்பமிடும் நிகழ்ச்சி, கட்டுரை,பேச்சு ஓவியப்போட்டி, விநாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியன மாவட்ட ஆட்சியர் திருமதி கே சாந்தி இ ஆ ப அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன் இ கா ப மற்றும் கூடுதல் ஆட்சியர் திருமதி. தீபனாவிஸ்வேஷ்வரி. இ ஆ ப ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா துரை, அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் குப்புசாமி, முருகன் தேசிய மாணவர் படை அலுவலர் தீர்த்தகிரி, அரசு பொறியியல் கல்லூரி ஆங்கில துறை உதவி பேராசிரியர் அமலன், கிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
மேலும் அரசியலமைப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் மோகன், இராஜேஷ்கண்ணன், ரியல் பவுண்டேசன் இயக்குநர் செந்தில்ராஜா, நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் பரமேஸ்வரன், செட்டிக்கரை அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். தேசிய அரசியலமைப்பு தினத்தினை சிறப்பாக கொண்டாடும் அனைத்து பணிகளையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் தலைமையில் செய்யப்பட்டது.
தேசிய இளைஞர் தொண்டர்கள் அரிபிசாந்த் மற்றும் ஞானராஜ் ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கினர், 400க்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தது பாராட்டத்தக்கது ஆகும்.
