எனது செயல்பாடுகளால் எந்த ஒரு பெண்ணையும் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன். எனது கவனத்திற்கு வரும் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வன்முறைகள், பாலியல் ரீதியான கொடுமைகளைத் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இன்றைய பெண்கள் நாட்டின் கண்கள், ஒரு குடும்பம் தலை ஓங்குவது பெண்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி தன்னுரிமை மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன். நான், பெண் கல்வியறிவுள்ள சமூதாயத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பெண்களுக்கு உண்டான உரிமைகள் மற்றும் சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.” என்ற உறுதிமொழியினை வாசிக்க அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், திரு.பெ.இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரவிக்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) / ஒருங்கிணைந்த குழந்தை வளரச்சி பணிகள் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.ஜான்சிராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வி.மரியம் ரெஜினா, அரசு தருமபுரி மருத்துவக்கல்லுரி மருத்துவமனை முதல்வர் மரு. அமுதவள்ளி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. எம். சாந்தி, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ச.சௌண்டம்மாள், மருத்துவப்பணிகள் (குடும்ப நலம்) துணை இயக்குநர் மரு. மலர்விழி, மருத்துவப்பணிகள் (காசநோய்) துணை இயக்குநர் மரு. ராஜ்குமார், மருத்துவப்பணிகள் (தொழுநோய்) துணை இயக்குநர் மரு. புவனேஸ்வரி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
