தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் இன்று ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பொது மக்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கும் நீர் நிலைகளின் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை அலுவலர் பைரோஸ்பாஷா, உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரன் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.