தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரம், அட்மா திட்டத்தின் கீழ் உள் மாவட்ட அளவிலான - முருங்கை சாகுபடி மற்றும் மதிப்பு கூட்டும் நடைமுறைகள் குறித்து விவசாயிகள் பட்டறிவுப் பயணம் இன்று 05.11.2022 முருக்கம்பட்டி கிராமம், காரிமங்கலம் வட்டாரத்தில் நடைப்பெற்றது.
இப்பயிற்சியில் முருங்கை சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயி மாயகிருஷ்ணன் அவர்கள், முருங்கை சாகுபடி தொழில்நுட்பங்களான இரகங்கள், நிலம் தயாரித்தல், களைகட்டுப்பாடு, நுனிகிள்ளுதல், மறுதாம்புப் பயிர், பூச்சி மேலாண்மை முறை மற்றும் காய்கறிகள் அறுவடை, மகசூல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயி அவர்கள் விளக்கமளித்தார்.
மேலும் இப்பட்டறிவுப் பயணத்தில் விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சாகுபடி தொழில்நுட்பங்களை கேட்டறிந்தார்கள். இப்பட்டறிவுப் பயணத்தில் 50 கற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான முன்னேற்பாடுகள் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்செல்வி உதவி தொழில்நுட்ப மேலாளர் செய்தனர், பட்டறிவுப் பயணம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.