.jpg)

இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும் போதிருந்தே கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நேற்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஊத்தங்கரை முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு பாலக்கோடு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் சம்மதிக்காததால் காதலனுடன் காதலியை தனியே அனுப்பி வைத்தனர்.