தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் நேரு யுவகேந்திரா தர்மபுரி இணைந்து 'ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் (31.10.22 to 06.11.2022) முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கு 'ஊழல் இல்லா பாரதம்' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் தர்மபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திரு பெருமாள் அவர்கள், சிறப்பு காவல் ஆய்வாளர், மற்றும் பாப்பாரப்பட்டி IRDO NGO, இயக்குனர் திரு கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர். மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார். தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத்துறை பேராசிரியரும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலருமான முனைவர் சி. கோவிந்தராஜ் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக நேரு யுவகேந்திரா திட்ட மேற்பார்வையாளர் திரு வேல்முருகன் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக திரு. ஹரி பிரசாத் நன்றியுரை வழங்கினார். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் பெருமாள், ஹரி கிருஷ்ணன் முத்தரசு, நிர்மலா ஆகியோர் செய்து இருந்தனர்.