உரிய தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி மற்றும் முடிவு தேதி விபரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளனவா என கண்காணிக்கப்பட்டு காலாவதியான குளிர் பானங்கள், உரிய விபரங்கள் இல்லாத குளிர் பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. குடிநீர் கேன்கள், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர் பானங்கள் வெயில்படும்படி வைக்கக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டது.

இரண்டு கடைகளில் அச்சிட்ட பேப்பரில் எண்ணெய் பலகாரங்கள் காட்சிபடுத்தியும் விநியோகித்தையும் பறிமுதல் செய்ததுடன் அச்சிட்ட தாள்களில் எண்ணெய் பலகாரங்கள் பொட்டலமிடுதல் விநியோகம் கூடாது என விழிப்புணர்வு செய்தனர். மேலும் ஒர் பேக்கரியில் ஒர் முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் தடை செய்ய்பட்ட நெகிழியில் பார்சலிட்ட சூடான டீயை பறிமுதல் செய்து அழித்ததுடன் எச்சரிக்கை நோட்டீஸ் அளித்து உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.
குளிர்பான மொத்த விற்பனை நிறுவனங்களில் ஆய்வின் போது குளிர்பானங்கள் தரம் கண்டறிய மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆய்வு மாவட்டம் முழுதும் மேற்கொள்ளப்படும் என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர்.பானுசுஜாதா அவர்கள் தெரிவித்தார்.