தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பசுவாபுரம் ஊராட்சி சிவனள்ளிபகுதிகள் பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்று விழா மண்டல் தலைவர் பிரபு முன்னிலையில் நடைபெற்றது.
இதில் மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன், எஸ் ஆர் அழகு. மாவட்ட துணை தலைவர் சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர், பின்பு கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, இந்த நிகழ்வில் மேற்கு மண்டல தலைவர் பச்சையப்பன், பொதுச் செயலாளர்கள் மகேந்திரன் சிங்காரம். மண்டல தலைவர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.