தருமபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்று வரும் நூலக வார விழாவில், இன்று கடத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை அ. இந்திரா காந்தி தலைமை வகித்தார்.
ஆசிரியைகள் லீலா, நிர்மலா, சுமதி, சத்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரக் கல்வி அலுவலர்கள் இ. மகேந்திரன், மு. முருகன் சிறப்புரையாற்றினர். பத்திரிகையாளர் பொம்மிடி முருகேசன் நூலகர் சி. சரவணன் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர் டி.சுப்பிரமணியம் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
அன்பு அறக்கட்டளை இயக்குநர் சீ.பூவேந்தரசு, கே.டி. முருகன் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர். முன்னதாக ஆசிரியர் பா. திருமால் வரவேற்புரை வழங்கினார். முடிவில் கா. ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.