பென்னாகரம் மேற்கு ஒன்றிய பா ஜ க சார்பில் பால் விலை உயர்வு கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் இளங்குமரன் தலைமை வகித்தார்.முன்னாள் ஒன்றிய தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார்.
பொது செயலர் ரவி வரவேற்பு உரை ஆற்றினார். ஒ பி சி பிரிவு மாவட்ட தலைவர் காவேரிவர்மன், மாநில பொது குழு உறுப்பினர் ரமேஸ்வர்மா ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். ஒன்றியபொது செயலாளர் முருகன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றிய துனை தலைவர் பெருமாள்கவுண்டர், மாவட்ட ஒ.பி.சி அணி நிர்வாகி கார்த்திக், கலை பிரிவு மாநில செயலர் நந்தகுமார், மருத்துவர் பிரிவு பீனு, மற்றும் நிர்வாகிகள் கமலநாதன், மகாராஜன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.