தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் இன்று கல்லறை திருநாளை ஒட்டி கிறிஸ்தவர்கள் உறவினரின் சமாதியில் மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
உயிர் நீத்த கிறிஸ்தவர்கள் சமாதியில் பூஜை செய்யும் நாளாக ஆண்டுதோறும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இன்று புதன்கிழமை நடைபெற்ற கல்லறை நிகழ்ச்சியில் தருமபுரி நகரப் பகுதி, மற்றும் வெளிப்புறத்தில் இருக்கும் கல்லறைகளில் பிரார்த்தனை செய்வதற்கு கிறிஸ்தவர்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்தோடு கல்லறைக்குச் சென்று உறவினர்களின் சமாதியை சுத்தம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பொம்மிடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கல்லறைக்கு சென்று மலர் தூவி சிலுவைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏத்தி சாம்பிராணி புகையிட்டு வழிபாடு நடத்தினர்.
