தருமபுரி கௌரி சங்கர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு அவசரமாக ஓ நெகடிவ் ரத்தம் சிகிசைக்கு தேவைப்பட்டது, இதற்காக மை தரும்புரி அமைப்பு மற்றும் மனிதம் போற்றுவோம் மூலம் இரண்டு ஓ நெகடிவ் குருதி கொடையாளர்களை ஏற்பாடு செயப்பட்டது, இதில் தருமபுரி செந்தில்குமார் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பணியாற்றி வரும் ஜித்து என்பவர் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக ரத்ததானம் அளித்தார்.

இதற்கு செந்தில்குமார் நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்தனர், அவர்களுக்கு மை தருமபுரி அமைப்பினர் மற்றும் குழந்தையின் பெற்றோர் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர், அதேப்போல நல்லம்பள்ளி சவுளூர் ஊரை சேர்ந்த சாமி விக்னேஷ் உடனடியாக மருத்துவனை வந்து ரத்ததானம் அளித்தார். இரவு நேரம் என்று கூட பாராமல் ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றிய இரண்டு இளைஞர்களை மை தருமபுரி அமைப்பினர், மருத்துவர்கள், குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து பாராட்டினார்கள்.