நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து துறையினரும் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில், அரூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பெனசீர் பாத்திமா அறிவுறுத்தலின் பேரில், பொம்மிடி பொறுப்பு காவல் ஆய்வாளர் நாகலட்சுமி மேற்பார்வையில் நீர் நிலைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, மேலும் பொம்மிடியில் இருந்து ஓமலூர் செல்லும் நெடுஞ்சாலையில் சேலம் மாவட்ட எல்லையில் வேப்பாடி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
இந்தப் பகுதியில் மக்கள் பாதை இல்லாத இடத்தில் பயன்படுத்தி வருகின்றனர், வேறு பாதை இருந்தும் பயன்படுத்தாமல் நீர்நிலைகளைக் கடந்து சென்று வருகின்றனர், இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது என காவல்துறை எச்சரிக்கை விடுத்தும்,
பொதுமக்கள் எச்சரிக்கையை மீறி அந்தப் பாதையை பயன்படுத்தி வந்தனர் இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது, இதையடுத்து பொம்மிடி காவல்துறையினர் வேப்பாடி ரயில்வே பாலத்துக்கு அடியில் ஆற்றில் கடந்து, பொதுமக்கள் ஆபத்தான முறையில் செல்ல முடியாதபடிக்கு தடுப்புக் குழிகளை அமைத்து வருகின்றனர்
அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது, இதனால் விபத்துக்கள் குறையும் என போலீசார் தெரிவிக்கின்றனர்