தருமபுாி மாவட்டம் கடத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பொருட்டு மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் இளைஞர் திறன் மேம்பாட்டு திருவிழர நேற்று கடத்துார் தொடக்கப்பள்ளியில் நடந்தது.
இதில் ஒன்றியத்திற்க்குட்பட்ட 370 இளைஞர்கள், பெண்கள் பங்கேற்ற இந்த நிகழ்வின் போது. 14 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று 116 பேர்களை பயிற்சிக்காக தேர்வு செய்தனர்.3 முதல் 6 மாதம் வரைபயிற்சியும் அதில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வங்கி கடன் பெறுவும் வழிவகை செய்யும் பொருட்டும் இத்திருவிழா நடநதது.

தருமபுாி மாவட்ட ஆட்சியர் சாந்தி இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு பயிற்சி ஆணைகளை வழங்கி உரையாற்றினார்.
இதில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு, ஒன்றியக்குழு தலைவா் உதயா, வட்டார வளர்ச்சி அலுவலா்கள் ரேணுகா, கல்பனா, மகளிர் திட்ட உதவி இயக்குனர்கள் கார்த்திகெயன், ராஜேஸ், வட்டார இயக்க மேலாளர் ரமேஸ், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மதுப்பிரியா, அனுசியா, இளவரசி, சுகுணா, பிரபாவதி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மோட்டாங்குறிச்சியில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் நடத்தப்படும் காளான் உற்பத்தி மையத்தினை மாவட்ட ஆட்சியர் சாந்தி பார்வையிட்டார். தொடர்ந்து வேளாண் உற்பத்திக் குழுவைச் சேர்ந்த 20 நபர்களுக்கு தலா ரூ 15 ஆயிரம் வீதம் ரூ 3 லட்சத்தையும் ஆட்சியர் வழங்கினார்.