Type Here to Get Search Results !

18 ஆயிரம் சம்பளத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணிவாய்ப்பு.

தருமபுரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக சமூகப்பணியாளர் (Social Worker) பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தை சார்ந்த தகுதியான நபர்கள் உடன் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. 


தருமபுரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட காலிப்பணியிடத்தில் 1 வருட ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளார். இதில் தேர்வு செய்யப்படும் பணியாளர் கீழ்கண்ட பதவிக்கேற்ப அரசு அறிவித்துள்ள தொகுப்பூதியம் வழங்கப்படும்.


நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம் மற்றும் தொகுப்பூதியம்

1. சமூகப்பணியாளர் (Social Worker) - 1 பதவி தொகுப்பூதியம் ரூ.18,536/- ஒரு மாதத்திற்கு


வயது, கல்வித் தகுதி மற்றும் அனுபவம் 

சமூகப்பணியாளர் (Social Worker)பட்டதாரி (10+2+3 மாதிரி) சமூகப்பணி / சமூகவியல் / சமூக அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


இப்பணியில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் மற்றும் கணிணியில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். (Graduate Preferably in B.A in social work / sociology /social sciences from a recognized university, weightage for work experience candidate with proficiency in computer) வயது-40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது.


மேற்கண்ட பதவிக்கான தகுதியுள்ள விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Passport Size) கூடிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து 21.11.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். 


மேற்கண்ட பதவிக்கு தருமபுரி மாவட்டத்தை சார்ந்த தகுதியான நபர்கள் உடன் விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884