
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கருவி இசை போட்டிகளில் தோல் கருவி, கம்பி கருவி, காற்று கருவி ஆகியவைகளுக்கான போட்டிகள் ஒன்றிய அளவில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளுக்கான மைய பொறுப்பாளர்களாக வட்டார கல்வி அலுவலர்கள் திரு. இரா. மணிகிருஷ்ணன், திரு.இரா. துளசிராமன், தலைமை ஆசிரியர் M. சின்னசாமி, தலைமை ஆசிரியர் மா. பழனி ஆகியோர் மையப் பொறுப்பாளர்களாக செயல்பட்டனர்.
போட்டிக்கான நடுவர்களாக ஆசிரியர்கள் சரவணன், மணிவாசகம், வினாயகம் ஆகியோர் செயல்பட்டனர். தோல் கருவி போட்டியில் பாப்பாரப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவன் மகேஷ் சர்மன் முதலிடமும் சின்னப்பளத்தூர் நடுநிலைப்பள்ளி மாணவன் பெரியண்ணன் ஆகியோர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
வட்டார வளமை ஆசிரியர் பயிற்றுநர்கள் கோவிந்தன், கமலேசன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
