இந்நிலையில் அந்த குத்தகையானது கடந்த 31-6-2022 அன்று குத்தகை காலம் முடிவடைந்ததையோட்டி ஏரியை ஏலம் விடக் கூறி சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உதவி பொறியாளர் வெங்கடேஸ்வரன் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர் பொதுமக்களிடம் சென்ற பசலி ஆண்டு ஏலம் எடுத்த உரிமை காலம் கடந்த ஜூன் மாதம் முடிவடைந்து விட்டதால் தற்பொழுது ஏலம் விட தயார் செய்திருந்த நிலையில் சென்றமுறை ஏலம் எடுத்திருந்த நபர்கள் தங்களுக்கு நஷ்டம் அடைந்து விட்டதாக உரிமை காலத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர் எனவே ஒரு வார காலம் மீன்பிடி ஏலத்தை இன்று நிறுத்தி வைத்தார் உடனடியாக பொதுப்பணித்துறை சார்பில் வழக்கை சந்தித்து மீண்டும் ஏலம் விடும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.
பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை திடீரென 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதி பதற்றத்துடன் காணப்பட்டது.
