
இந்த ஆலோசனை கூட்டத்தில் கழகம் ஓபிஎஸ் தலைமையில் ஒன்றுபட்டு கழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும், திமுக அரசு அறிவித்த மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும், ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான குமார், மாவட்ட அவை தலைவர் கமலேசன், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் முனியன், மாவட்ட மாணவரணி செயலாளர் மாரியப்பன், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் பரிகம் வெங்கடாசலம், தொகுதி பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் முனுசாமி, ஒன்றிய செயலாளர்கள் தர்மபுரி தெற்கு பாலகிருஷ்ணன், தர்மபுரி வடக்கு இளையராஜா, காரிமங்கலம் மேற்கு விஜயன், பாலக்கோடு தெற்கு மாதேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
