தர்மபுரியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 நவம்பர், 2022

தர்மபுரியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர செயலாளர்கள் நாட்டான் மாது தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தங்கமணி, முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், சப்தகிரி கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


நகராட்சி கவுன்சிலர்கள் முருகவேல், பாண்டியன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். விழாவையொட்டி பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. விழாவில் கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.