வட்டார வள மையம் நல்லம்பள்ளி- உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நல்லம்பள்ளி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி- அவ்வை நகர் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

போட்டிக்கு சிறப்பு விருந்தினராக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் அய்யா திரு வெங்கடேசன் அவர்கள் கலந்து கொண்டார் .மேலும் இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலர் திரு குணசேகரன் அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் திரு ராஜகோபால் அவர்கள், மாவட்ட உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா அவர்கள், மாவட்ட ருங்கிணைப்பாளர் மோகனப்பிரியா அவர்கள், தடங்கம் பஞ்சாயத்து தலைவர் கவிதா அவர்கள், வார்டு உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் திரு செல்வக்குமார் அவர்கள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அவ்வை நகர் தலைமை ஆசிரியர் திருமதி ஸ்டெல்லா மேரி அவர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு மகாலிங்கம் அவர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், இயன் முறை மருத்துவர்கள், மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
விழாவில் திரு மகாலிங்கம் அவர்கள் வரவேற்புரையும், சட்டமன்ற உறுப்பினர் திரு வெங்கடேசன் அவர்கள் சிறப்புரையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாழ்த்துரையும், மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் முடிவுரையும் கூறி விழாவை சிறப்பித்தனர் மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், பாட்டில் நீர் நிரப்புதல், பலூன் ஊதி வெடித்தல், தவளை ஓட்டம், மியூசிக் சார், காய்கறி வண்ணங்கள் மற்றும் எண்கள் அடையாளம் காணுதல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் இறுதியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் வழங்கினார்.
