தர்மபுரி நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.கல்விக்கரசி, தர்மபுரி நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. அகிலா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. மோகனப்பிரியா, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் திரு.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஓட்டப்பந்தயம் ,ஸ்பூன் வித் லெமன், காய்கறிகளை ஒன்று சேர்த்தல், மியூசிக்கல் சேர் போன்ற போட்டிகள் நடைபெற்றன இதில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம் ,சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன இந்நிகழ்வினை தருமபுரி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) கவிதா மற்றும் வட்டார மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் திரு .சிவக்குமார் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர்.
இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு. சிவகுமார், திரு. முனியப்பன், திரு.மோகன் மற்றும் சிறப்பாசிரியர்கள் ரகுபதி ராஜ்மோகன் வனிதா, சாரதா, திருநாவுக்கரசு, முனியம்மாள் மற்றும் இந்திரா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
