தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா மற்றும் சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு குழந்தைகள் திட்ட மாவட்ட அலுவலர் வின்ஜான்சி ராணிதலைமை தாங்கினார்.

வட்டார உதவி திட்ட அலுவலர் சித்ரா வரவேற்று பேசினார் ஒன்றிய குழு தலைவர்கள் கவிதா ராமகிருஷ்ணன், பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே மணி எம் .எல் .ஏ கலந்து கொண்டு ஏரியூர், பென்னாகரம் ஒன்றியங்களை சேர்ந்த 250 கர்ப்பிணிகளுக்கு சமூக வளைகாப்பு செய்து சீர்வரிசைகளை வழங்கினர் மேலும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து கையேடும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வட்டார உதவி திட்ட அலுவலர்கள் ஜெயந்தி, சுகந்திரம் பிரியா, பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திர பாபு, திமுக மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார் இளைஞர் சங்கர் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்