தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் தும்பலஹள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சமையல் கூடத்திற்கு போதிய கட்டிட வசதி இல்லாததால் புதிய கட்டிடம் வேண்டி பொது மக்கள் கோரிக்கை அளித்திருந்தனர்.

புதிய சமையல் கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 5.32 இலட்ச ரூபாயை பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கினார்.
அதனை தொடர்ந்து இன்று பூமிபூஜை செய்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெரியண்ணன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர கோவிந்தராஜ், ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் முனியம்மாள், முன்னாள் கவுன்சிலர் செல்வி ராஜா, நாகராஜ், பூபாலன், கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
