ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அனுகி மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்று சிகிச்சை எடுத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் சேதமடைந்த பைப் லைன்களை சரி செய்து முறையான குடிநீர் வழங்குதல், நீர்நிலை கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் முறையாக அகற்றம், ஊராட்சியில் பழுதடைந்த கட்டிடம் இருந்தால் உடனடியாக சீரமைத்தல், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் இதுவரை சேர்க்காத விடுபட்ட தகுதியான பயனாளிகளை உடனடியாக இணைக்க உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை கோபால், துணைச் சேர்மன் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ரவி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
