தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான தருமபுரி மொரப்பூர் இரயில்வே திட்டம் செயல்படுத்துவதில் தருமபுரி மதிகோன்பாளையம் அருகில் வீடுகள் மற்றும் விளைநிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அளவீடு செய்யப்பட்டன.

அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் நிலங்கள் பாதிக்கப்படுவதால் எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லை என்று எங்கள் வீடு மற்றும் விளை நிலங்களை மீட்டு தர வேண்டி மனுக்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்களிடம் ஊர் பொதுமக்கள் மனுக்கள் வழங்கப்பட்டன.