விழாவில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை பொறுப்பாளர்கள் திரு. வசந்த், திரு. விஜயன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு. வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அரசியலமைப்பின் தந்தை அண்ணல் டாக்டர். அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. விழாவில் அரசியலமைப்பு சாசனம் உணர்த்தும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகிய மதிப்பீடுகளை முன்னிறுத்தி அரசியலமைப்பு உரிமை மன்ற மாணவ மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பாடல்கள் இடம் பெற்றன.
இவ்விழாவை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் தொடக்கப்பள்ளி, புனித அன்னாள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றோடு லிப்ட் மையம் மற்றும் ஆக்சன் எயிட் ( ACTION AID) அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
பள்ளியின் தாளாளர் அருட்தந்தை. ஆல்பர்ட் ஜோசப், தலைமையாசிரியர் அருட்தந்தை. பால் பெனடிக்ட், லிப்ட் மைய இயக்குனர் அருட்தந்தை. ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலையில், உதவித் தலைமையாசிரியர் திரு. செல்வராஜ், ஆசிரியர்கள் திரு. பால் பிரிட்டோ, திரு. தீர்த்தகிரி, திரு. விஜய், திரு. ஆரோக்கியதாஸ், திரு. முத்து, அருட்சகோதரர். ரெக்ஸ் அந்தோணி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
