தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னப் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மேலாண்மைக்குழு தலைவர் K. கங்கா தலைமை வகித்தார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் மா. பழனி மேலாண்மை குழு கூட்டம் மற்றும் செயல்பாடுகள் பற்றி விரிவாக பேசினார். கூட்டத்தில் பள்ளியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பிக் கொள்ளுதல், பள்ளி சுற்றுச் சுவர் கழிப்பிடம் போன்றவற்றுக்கான தீர்மானங்கள் பள்ளி ஆண்டு திட்டம் தயாரித்தல் உள்ளிட்டவைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

பள்ளி மேலாண்மை குழுவை பார்வையிட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வருகை தந்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களிடையே கலந்துரையாடினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.