காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில். இரவு பெய்த கனமழையால், இன்று காலை நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது.

இதனால் பிரதான அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. மலைப் பகுதிகளில் இருந்துதண்ணீர் வரத்து இருந்ததால், செம்மண் நிறத்தில்த ண்ணீர்ஓடுகிறது. மேலும், தமிழக - கர்நாடகமாநில எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத் துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.