மனுவின் விபரம் பின்வருமாறு
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம், கெட்டியான அள்ளி ஊராட்சிக்குட்பட்டது.பட்டகப்பட்டி ஆதிதர்விடர் காலனி, இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.பலதலைமுறைகளாக வாழ்ந்துவரும் இம்மக்களுக்கு சொந்த விவசாய நிலம் இல்லை, தினக்கூலிகளாக வேலைசெய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு 1990- ம் ஆண்டில் அரசு தொகுப்பு வீடு கட்டி கொடுக்கப்பட்டது.தற்போது இந்த வீடுகள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.அந்த சேதமடைந்த வீட்டிலேயே ஒரு வீட்டில் இரண்டு, மூன்று, குடும்பங்களாக வாழ்ந்துவருகின்றனர்.
இங்கு பொதுகழிப்பிடம் இல்லாததால் திறந்த வெளியில் இயற்கைஉபாதைக்கு செல்லவேண்டியுள்ளது.இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. மேலும் இந்த கிராமத்திற்கு சுடுகாடு இல்லை .இறந்தவர்களை ஆற்றோரம் அடக்கம் செய்கின்றனர்.
எனவே சுடுகாட்டுக்கு நிலம் ஒதுக்கி, சுடுகாட்டுடன் பாதை அமைத்து தரவேண்டும்.வீடு இல்லாதவர்களுக்கு இலவசமனைபட்டா வழங்கி,அந்த இடத்தில் அரசு வீடுகட்டிதரவேண்டும்.
இங்குள்ளவர்களுக்கு வீட்டிற்கு ஒரு கழிப்பறை வசதியும்,இக்கிராமத்தில் பொது சுகாதார வளாகம் அமைத்துதரவேண்டும் என அக்கிராம மக்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்
