
தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், பாமக தருமபுரி மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, ஒன்றிய அளவில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து இளைஞர் சங்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் வருகின்ற 04.12.2022 அன்று தருமபுரி மாவட்டத்திற்கு வருகைத்தரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்டவை குறித்து பேசினார்.
பாமக மாவட்ட தலைவர் மு.செல்வகுமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ், அன்புமணி தம்பிகள் கடை செயலாளர் இரா.கார்த்திகேயன், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர்கள் – க.முனிவேல், சி.மாதப்பன். ந.சின்னசாமி, மு.சிவகுரு, இரா.சிலம்பு, மாவட்ட இளைஞர் சங்க துணை தலைவர்கள் – சு.தேவராஜ், ப.சந்தோஷ், ச.சந்தோஷ்குமார், பசுமைத் தாயக மாவட்ட பொறுப்பாளர் தமிழரசன், ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, நகர செயலாளர் கி.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
