பாப்பிரெட்டிபட்டி, பொ.மல்லாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவிகளுக்கு, சேப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தர்மபுரி எம்.பி.செந்தில்குமார் போர்வைகள், இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மெடிக்கல் சத்தியமூர்த்தி, பொ. மல்லாபுரம் நகர செயலாளர் கௌதமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள், மாணவிகள்/ இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
