தர்மபுரி 9வது வார்டு திமுக சார்பில், திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 45 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி புரோக்கர் அலுவலகம் அருகில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கி,கழக கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகர கழக செயலாளர் நாட்டான் மாது முன்னிலை வகிக்க, தர்மபுரி மாவட்ட இளைஞரணி பிஎஸ்பி அசோக்குமார் வரவேற்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் 9வது வார்டு உறுப்பினர் மாதையன், தர்மபுரி கிழக்கு மாவட்ட பொருளாளர் தங்கமணி, தர்மபுரி நகர மன்ற உறுப்பினர்கள் அன்பு, முல்லை, சுருளிராஜன் 9வது வார்டு செயலாளர் கனகராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் முருகன், பிரதிநிதிகள் அருண், சுமன், சூர்யா, வெங்கடேஷ், சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் 200 நபர்களுக்கு வேட்டி சேலை மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கபட்டது.
