பாலக்கோடு, அரூர் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளை உள்ளடக்கி தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக என அறிவிப்பு செய்து பழனியப்பன் அவர்களை மாவட்ட செயலாளராக திமுக தலைமை கழகம் அறிவித்ததை அடுத்து மூன்று தொகுதிகளை உள்ளடக்கிய செயல் வீரர்கள் கூட்டத்தை காரிமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் என முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் அவர்கள் தொண்டர்களுக்கும் கட்சியினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யும் விதமாக பாலக்கோடு, அரூர்,பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் உள்ள மாநில, மாவட்ட ,ஒன்றிய, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். .ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற வுள்ளார் என்பது குறிப்பிட்டுத்தக்கது.