தருமபுரி நகரில் தங்கள் சமூக மூலம் தங்களுக்கென ஒரு தடத்தை பதிவு செய்துள்ள மை தருமபுரி அமைப்பினர் இன்று தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பத்தூரை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க மனா நலம் பாதிக்கப்பட்ட நபர் காயம் காரணமாக சிகிச்சைபெற்று வந்தார், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் உடலை உறவினரிடம் ஒப்படைக்க அவர் குறித்த எவ்வித தகவலும் இல்லாத காரணத்தினால் மை தருமபுரி அமைப்பினரின் உதவியுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஷ்குமார் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில ஆண் ஒருவர் விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார், ஆதரவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்து உயிரிழந்த நிலையில், இவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை உறவினர்களும் யாருமில்லை. இன்று மை தருமபுரி அமரர் சேவை மூலம் இறந்தவரின் உடலை எங்கள் சொந்தம் போல் எண்ணி இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தோம்.
இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலமாக இருபது அமரர்களை நல்லடக்கம் செய்துள்ளோம். இன்று நல்லடக்கம் செய்ய உறுதுணையாக இருந்த திருப்பத்தூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ், காவலர் சிலம்பரசன் ஆகியோர் நல்லடக்கம் செய்ய உதவியாக இருந்தனர்.

மை தருமபுரி அமரர் சேவை சார்பாக திரு.ராகவ், மீட்பு அறக்கட்டளை பாலச்சந்திரன் ஆகியோர் அமரரை நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமைப்பின் சார்பாக ஆதரவற்று இறந்தவர்கள், வறுமையில் இறந்தோர் ஆகியோரது உடல்களை எங்கள் உறவாக எண்ணி நல்லடக்கம் செய்து வருகிறோம். மை தருமபுரி சேவை இருக்கும் வரை இங்கு ஆதரவற்றவர்கள் அனாதைகள் என்று யாரும் இல்லை என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். என தெரிவித்தார், இவர்களின் இந்த செயல் தருமபுரி மாவட்ட மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுவருகிறது.