ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் டிசம்பர் 3 ஆம் தேதி "உலக மாற்றுத்திறனாளிகள் தினம்" கொண்டாடப்படும் நிலையில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள்:
- உறுதிமொழி எடுத்தல்,
- விழிப்புணர்வு பேரணி
- இணைவோம் மகிழ்வோம்.
- ஒருங்கிணைந்த விளையாட்டுப் போட்டிகள்,
- ஒருங்கிணைந்த கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள்.
- சிறார் திரைப்படங்கள்.
- சைகை மொழி தமிழ்தாய் வாழ்த்து ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
திட்டமிட்டபடி முதற்கட்டமாக, 14.11.2022 அன்று நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 196 பள்ளிகளிலும் முதல் நிகழ்வான சாலை இறைவணக்கக் கூட்டத்தில் உறுதிமொழி எடுத்தன் நிறைவேற்றப்பட்டது.
இதில் பல்வேறு இதில் பல்வேறு பள்ளிகளில் பஞ்சாயத்து தலைவர்கள் எஸ்.எம்.சி உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், சாதணையாளர்கள் போன்றோரை வரவழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இரண்டாம் கட்ட நிகழ்வாக 16.11.2022 அன்று அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அதியமான்கோட்டை மற்றும் அரச உயர்நிலைப் பள்ளி அவ்வைநகர் ஆகிய இரண்டு பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடங்கியக் கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணியில் நல்லம்பள்ளி வட்டார மருத்துவ அலுவலர் Dr.K.வாகதேவன் மாற்றுத்திறனாளி பிறப்பதற்கான காரணங்கள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். தலைமையாசிரியர் (பொ) அவர்கள் தலைமை தாங்கினார். வட்டார வள மைய IE ஒருங்கிணைப்பாளர் பெ. ரதிதேவி வரவேற்புரை வழங்கினார்.

இப்பேரணியில் மாவட்ட IE ஒருங்கிணைட்பான மோகசுப்பிரியா விழிப்புணர்வு குறித்து கருத்துக்களை வழங்கினார். மேலும் பேரணியின் மேற்பார்வைளர்(டொ) M.மகாலிங்கம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் K.இராசாமி, வட்டார சுகாதார ஆய்வாளர் V.சரவணன், SMC உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.