தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பசுவாபுரம் ஊராட்சியில் நவ - 1 ல் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இதில் ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் ஜெயராமன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பட்டாபிதுரை வரவு செலவு கணக்கு அறிக்கை வாசித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கடத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் கலந்து கொண்டு இக்கூட்டத்தில் பேவர் பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் காழ்வாய்அமைத்தல், துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு சிறப்பு கௌரவம் செய்யப்பட்டு, மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ 6 லட்சம் கடன் உதவி வழங்க முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இதில் அரசு பல்வேறு துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் ஏராளமான கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர்

