Type Here to Get Search Results !

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 427 மனுக்கள் வரப்பெற்றன; இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (28.11.2022) நடைபெற்றது.

இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 427 மனுக்கள் வரப்பெற்றன.


இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் விடுதிகளில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு சிறந்த விடுதிகளாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக பென்னாகரம் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதியில் பணியாற்றும் காப்பாளினி திருமதி.வி.விநாயகசுந்தரிக்கு பரிசுத்தொகையாக ரூ.10000/-க்கான காசோலையும், நற்சான்றிதழும், கேடயமும், இரண்டாம் பரிசாக நரிப்பள்ளி அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதியில் பணியாற்றும் காப்பாளினி திருமதி.எம்.ஜி.ஜெயந்திக்கு பரிசுத்தொகையாக ரூ.5000/-க்கான காசோலையும், நற்சான்றிதழும் கேடயமும் மற்றும் மூன்றாம் பரிசாக மொரப்பூர் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதியில் பணியாற்றும் காப்பாளினி திருமதி.வி.சுமதிக்கு பரிசுத்தொகையாக ரூ.3000/-க்கான காசோலையும், நற்சான்றிதழும், கேடயமும் என மொத்தம் 3 விடுதிகளின் காப்பாளினிகளுக்கு பரிசுத்தொகை, நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களை பரிசாக வழங்கினார்கள்.


இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி வட்டம், வெள்ளைய கவுண்டன் பாளையம், மேளக்காரத் தெருவைச் சேர்ந்த திருமதி.வடிவழகி என்பவருக்கு கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணையினை வழங்கினார்கள். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று நடைபெற்ற இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி வட்டம், ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் வசித்து வரும் திரு.பொ. மாது என்பவருக்கு இணைய வழி இ-பட்டா மாறுதலுக்கான ஆணையினை வழங்கினார்கள்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, அரூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) / மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு. வி. இராஜசேகரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி. வி.கே.சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.கவிதா, உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884