
இதற்கான தேர்வு முகாம் வரும் நவம்பர் 15.11.2022 முதல் 29.11.2022 வரை வேலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை தவறாமல் கொண்டு வரவேண்டும்.
மேலும் தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் இந்த ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.